கொலை செய்யப்பட்டு வீடொன்றின் அருகில் புதைக்கப்பட்டிருந்த இளைஞர்! தோண்டியெடுக்கப்பட்ட சடலம்
ரம்புக்கனையிலுள்ள வீடொன்றின் அருகில் புதைக்கப்பட்டிருந்த இளைஞரின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
அகழ்வு பணிகள் நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மாவனெல்லையில் வசித்து வந்த இரு இளைஞர்கள் கடந்த நவம்பர் மாதம் காணாமல் போயிருந்தனர்.
உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், இருவரையும் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணையில் தெரியவந்த தகவல்

இந்த நிலையில் ரம்புக்கனை - ஹுருமலுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இரு இளைஞர்களும் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த வீட்டினை சோதனையிட்டுள்ளனர்.
அத்துடன் சடலங்கள் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த வீட்டில் நேற்று பிற்பகல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஏனைய இளைஞரின் சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri