காணாமல் போனோரில் 19 பேர் மீட்பு : வெளியான தகவல்

Missing Persons Tamils Sri Lanka
By Theepan Mar 27, 2025 09:38 AM GMT
Report

காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோரைக் கண்டறியும் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் (26) ஊடகவியலாளர்களுக்கு இடம்பெற்ற கருத்தமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல்போனோரைக் கண்டறியும் செயலகங்களில் இதுவரை 16 ஆயிரத்து 966 பேர் காணாமல் போயுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 ஆயிரத்து 742 பேர் படையினர் மற்றும் பொலிஸார் என பாதுகாப்பு தரப்பினராக காணாமல் போயுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேயிலைத்துறையில் இலங்கையை முந்திச்சென்ற இந்தியா

தேயிலைத்துறையில் இலங்கையை முந்திச்சென்ற இந்தியா

விசாரணைகள்

அதில் 6ஆயிரத்து 449 பேரின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் , 10 ஆயிரத்து 517 பேர் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

காணாமல் போனோரில் 19 பேர் மீட்பு : வெளியான தகவல் | Rescue Of 19 Missing Persons In Sri Lanka

2000ஆம் ஆண்டிற்கு பின்பு 7 ஆயிரத்து 406 பேரும், 2000ஆம் ஆண்டிற்குப் முன்னர் 9 ஆயிரத்து 560 பேரும் காணாமல் போயுள்ளதாக ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதிலே 2000ஆம் ஆண்டிற்குப் பின்னர் காணாமல்போன 7ஆயிரத்து 406 பேரில் 6 ஆயிரத்து 449 பேர் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு

இடைக்கால நிவாரணம்

நிறைவு பெற்ற விசாரணைகளில் இருந்து 19 பேர் உயிரோடு இருப்பதனையும் கண்டறிந்துள்ளோம். அவர்களது விபரங்களை 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இணைத்துள்ளோம். அவை விரைவில் வெளிவரும்.

காணாமல் போனோரில் 19 பேர் மீட்பு : வெளியான தகவல் | Rescue Of 19 Missing Persons In Sri Lanka

அதேவேளை 2ஆயிரத்து, 604 பேர் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை பெற்றுள்ளனர். 407 பேர் மரணச் சான்றிதழிற்கான சிபார்சை பெற்றுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணத்திற்கு 4ஆயிரத்து 408 பேர் விண்ணப்பித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

யோசிதவின் நைட் க்ளப் விவகாரம்: நான்கு பேருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

யோசிதவின் நைட் க்ளப் விவகாரம்: நான்கு பேருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US