சாய்ந்தமருதில் கடலுக்குள் விழுந்த கனரக வாகனம் மீட்பு
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பௌஸி மைதானத்திற்கு அருகே கடலுக்குள் விழுந்த கனரக வாகனம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று(15.05.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
அண்மையில் இப்பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பினை தடுப்பதற்காக கரையோரம் பேணல் திணைக்கள கண்காணிப்பில் பாரிய கற்கள் போடப்பட்டு வருகின்றன.
முதற்கட்ட நடவடிக்கை
இதன் தொடர்ச்சியாக கல் அணைகள் அமைத்து கற்களைப் போட்டு நிரப்பும் முதற்கட்ட நடவடிக்கைக்காக பாரிய கற்களை கொட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த கனரக டிப்பர் வாகனம் வழமை போன்று கற்களை கடலுக்குள் கொட்டுவதற்காக சென்ற நிலையில் குடை சாய்ந்து கவிழ்ந்துள்ளது.
எனினும் குறித்த வாகனத்தை செலுத்திய சாரதி உயிர் தப்பியுள்ளதுடன் பொதுமக்கள் ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் கடலுக்குள் விழுந்த வாகனத்தை நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




முகேஷ் அம்பானியின் ரூ 15000 கோடி Antilia மாளிகையின் முதல் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
