சஜித் உள்ளிட்ட 4 எம்.பிக்களின் கோரிக்கைகளை நிராகரித்த பிரதி சபாநாயகர்
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த ஐந்து நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் அறிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான அறிவிப்பு இன்று(06.11.2026) நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தயாசிறி ஜயசேகர, மனோ கணேசன், முஜிபுர் ரஹ்மான் மற்றும் சாணக்க மதகொட ஆகியோர் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
எனினும், குறித்த கோரிக்கைகள் எதுவும் நாடாளுமன்ற சிறப்புரிமை மீறலை ஆரம்பநிலையில் உறுதிப்படுத்தவில்லை என சபாநாயகரின் அறிவிப்பை வாசித்த பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
சபை சிறப்புரிமை மீறல்கள் அல்ல..
நாடாளுமன்ற நடவடிக்கைகள், நிகழ்ச்சி நிரலில் விடயங்களை உள்ளடக்குதல் மற்றும் விவாதங்களுக்கான நேர ஒதுக்கீடு போன்றவை நடைமுறை சார்ந்த நிர்வாக விடயங்கள் என்றும் அவற்றை சிறப்புரிமை மீறல்களாகக் கருத முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள விடயங்களை நீக்கி திருத்திய பிரேரணையைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், குறிப்பிட்ட காலத்திற்குள் திருத்தப்பட்ட பிரேரணை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் கிடையாது என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இதனடிப்படையில், நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 118 இன் கீழ் சிறப்புரிமை மீறல் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க எந்தவிதமான அடிப்படையும் இல்லை என பிரதி சபாநாயகர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
you may like this video
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri