நடை பயணத்துக்கு இ.தொ.காவின் ஆதரவைக் கோருகின்றது முற்போக்குக் கூட்டணி!
தமிழ் முற்போக்குக் கூட்டணியால் எதிர்வரும் 12 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடை பயணத்துக்ககு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கினால் அதனை வரவேற்போம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் “உங்களின் பேரணிக்கு இ.தொ.கா.வின் ஆதரவு கோரப்பட்டுள்ளதா?' என எழுப்பப்பட்ட கேள்விக்கு இவர் கீழ்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
முழு ஆதரவு வழங்குவதாக தெரிவிப்பு
“தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் இடையில் தற்போது சுமுகமான உறவு நிலவுகின்றது.
நாம் பொதுவாக அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். எங்களது அழைப்பை இ.தொ.கா. அணியினர் ஏற்றால் அதை வரவேற்போம். மேலும் அவர்கள் (இ.தொ.கா.) நவம்பரில் 'மலையகம் – 200' நிகழ்வைச் செய்யவுள்ளனர்.
அதற்கு நாம் முழு ஆதரவு வழங்குவோம்" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
