பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: வட மாகாண ஆளுநர் வலியுறுத்து
பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஐ. நா பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளுக்கும், வட மாகாண ஆளுநர்
பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும் இடையில் நேற்று(14.11.2023) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், உதவி பிரதிநிதி பெகோனா அரேலானோ, கல்வி உத்தியோகத்தர் உள்ளிட்ட குழாத்தினர் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.
பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மாணவர்களின் கற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படும் விதம், சிறுவர்களுக்கான திறன் மேம்பாட்டு செயற்பாடுகள், சிறுவர் மீதான அத்துமீறல்கள், சட்டவிரோத செயற்பாடுகள், பெற்றோர்களுக்கு வழங்கப்பட வேண்டிய விழிப்புணர்வு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட வேண்டும்.
பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதிகாலை தொடக்கம், இரவு வரை மாணவர்கள் பிரத்தியேக வகுப்புகளில் தங்கவைக்கபடுவதால் , மாணவர்களின் திறன் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நேரம் ஒதுக்கப்படுவதில்லை.
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சையின் பின்னர் மாணவர்களின் நிலைப்பாடு கவலைக்கிடமாக காணப்படுகிறது. இந்த நிலையை மாற்றி அமைப்பதற்கு தேவையான ஆலோசனைகள் , வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும்.
சிறுவர் உரிமை மீறல்
பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுப்பதற்கான செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
சிறுவர்கள் உரிமை மீறல்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு தேவையான விழிப்புணர்வு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
சிறுவர்களின் எதிர்காலம் தொடர்பில் பெற்றோர்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளும், விழிப்புணர்வும் வழங்கப்பட வேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 22 மணி நேரம் முன்

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் கெட்ட செய்தி - இராணுவ சக்தியை மீண்டும் கட்டியெழுப்பிய ஈரான் News Lankasri
