வடக்கில் மோசமான காலநிலை: மாணவர்களுக்கு விடுமுறை வழங்கவும் - சுகாஸ் வலியுறுத்து

Jaffna Weather Floods In Sri Lanka
By Kajinthan Nov 15, 2023 11:34 AM GMT
Report

புதிய இணைப்பு

வடக்கில் பெய்துவரும் அதிக மழை காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் 18ஆம் திகதிவரை இந்நிலை தொடருமென்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் இன்னும் விடுமுறை வழங்கப்பட்டமை குறித்து வடமாகாண ஆளுனரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் சிரமப்படுவதுடன் மாணவர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக கூறியுள்ளார்.


முதலாம் இணைப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நேற்று(14) காலை 8.30 மணி முதல் இன்று (15) காலை 8.30 மணி வரையான மழைவீழ்ச்சி பதிவை அடிப்படையாகக் கொண்டே யாழ்ப்பாணத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


மழை வீழ்ச்சி

அவர் மேலும் தெரிவிக்கையில், அச்சுவேலியில் 175.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், பருத்தித்துறையில் 170.8 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், தெல்லிப்பழையில் 139.2 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் மீசாலையில் 133 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் தொல்புரத்தில் 118 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகி உள்ளது.

வடக்கில் மோசமான காலநிலை: மாணவர்களுக்கு விடுமுறை வழங்கவும் - சுகாஸ் வலியுறுத்து | People Affected In Jaffna Due To Bad Weather

அத்துடன் யாழ்ப்பாணம் மத்தியில் 68.7 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் கோட்டை பகுதியில் 58.8 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் சாவகச்சேரியில் 34.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் அம்பனில் 24.7 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் நயினாதீவில் 6.8 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் நெடுந்தீவில் 2.2 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

மேலும் கிளிநொச்சியில் 99.9 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் ஆனையிறவில் 56.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் அக்கராயனில் 128.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்திகள்: தீபன்

நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 94 குடும்பங்களை சேர்ந்த 317 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 59 குடும்பங்களைச் சேர்ந்த 197 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள அனர்த்தம்

இதேவேளை பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கில் மோசமான காலநிலை: மாணவர்களுக்கு விடுமுறை வழங்கவும் - சுகாஸ் வலியுறுத்து | People Affected In Jaffna Due To Bad Weather

அத்துடன் அதே பகுதியில் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 36பேர் ஒரு பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/167 கிராம சேவகர் பிரிவில் ஆலயம் ஒன்றிற்கு மேலே அரசமரம் ஒன்று குடைசாய்ந்ததில் குறித்த ஆலயம் சேதமடைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US