தமிழர் சுயநிர்ணயத்திற்கு ஆதரவை வழங்குங்கள்: சுவிஸ் ஜனாதிபதியிடம் கோரிக்கை

Sri Lankan Tamils Tamils Sri Lanka Politician
By Thileepan Jan 16, 2024 09:07 PM GMT
Report

இமாலயப் பிரகடனத்தை ஆதரிப்பதை விட, தமிழர்களின் சுயநிர்ணயத்திற்கு ஆதரவை வழங்குமாறு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் சுவிஸ் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தைபொங்கல் தினத்தை முன்னிட்டு வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்னால் அமைந்துள்ள போராட்ட தளத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க கொடிகளை ஏந்தியவாறும் பொது வாக்கெடுப்பே தமிழ் மக்களின் எதிர்காலம் எனப் பொறிக்கப்பட்ட பொங்கல் பானைகளை ஏந்தியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கைக்குள் நுழைய தயாராகும் இந்திய இராணுவம்

இலங்கைக்குள் நுழைய தயாராகும் இந்திய இராணுவம்

இமாலயப் பிரகடனம்

அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில், இமாலயப் பிரகடனம்' என்ற காலாவதியான கருத்தையும் ஒற்றையாட்சியையும் ஊக்குவிப்பதை விட, பொதுவாக்கெடுப்பை ஆதரித்து, தமிழர்களுக்கு சுயநிர்ணயத்தை வழங்கவும் சுவிஸ் ஜனாதிபதி வயோலா அம்ஹெர்ட்டை நாங்கள் கடுமையாக ஊக்குவிக்கிறோம்.

தமிழர் சுயநிர்ணயத்திற்கு ஆதரவை வழங்குங்கள்: சுவிஸ் ஜனாதிபதியிடம் கோரிக்கை | Request To The Swiss President

இமாலயப் பிரகடனத்தில்' பௌத்த குருமார்கள் பங்கேற்பதற்கு சுவிட்சர்லாந்து நிதியுதவி அளித்தது. அதற்கு நிதி உதவி வழங்குவதை நாம் எதிர்க்கிறோம். இந்த பிரகடனம் பன்மைத்துவ சமூகத்துடன் கூடிய ஒற்றையாட்சி அரசை உருவாக்க முயல்கிறது. இது சிங்கள சமூகத்திற்கு சாதகமாக அமையும்.

சுவிஸ் மற்றும் பிற அரசாங்கங்கள் செல்வாக்கு மிக்க தமிழ் குழுக்களை பலவீனப்படுத்துவதற்கு பங்களிக்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்களை ஆதரிக்கின்றன.

பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல்: உச்சக்கட்ட பதற்ற நிலை

பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல்: உச்சக்கட்ட பதற்ற நிலை

நிலங்களை அபகரிக்கும் முயற்சி

இதன் விளைவாக, இந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் போர்க்குற்றங்கள் மற்றும் தமிழர் அபிலாஷைகளுக்கான சர்வதேச நீதி பற்றிய விவாதங்களை மறைக்கின்றன. நல்லிணக்கம் என்றழைக்கப்படுவதை நாங்கள் நம்பவில்லை. ஏனெனில் இது தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் ஒரு மாறுவேட முயற்சியாகத் தெரிகிறது.

அரசியல் தீர்வு காண்பதில் தமிழர்களில் எவரும் ரணிலையோ அல்லது எந்த சிங்களத் தலைவரையும் நம்புவதில்லை. கடந்த 75 வருடங்கள் இதற்கான தெளிவான சான்றுகளை வழங்குகின்றன.

தமிழர் சுயநிர்ணயத்திற்கு ஆதரவை வழங்குங்கள்: சுவிஸ் ஜனாதிபதியிடம் கோரிக்கை | Request To The Swiss President

இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும், போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கும் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்த சுவிஸ் நாடானது வளங்களை ஒதுக்குமாறு அந்த ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம்.

தமிழர் பிரச்சினை

சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதியாக நீங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் தலைமைப் பதவியை வகிக்கிறீர்கள்.

எனவே, வாக்கெடுப்பு என்பது நேரடி ஜனநாயகத்தின் ஒரு வடிவமாக இருப்பதால், நீங்கள் தமிழர் பிரச்சினையை ஆதரிப்பது மட்டுமல்லாமல், பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

செழுமையான தமிழ் கலாச்சாரத்தையும், அதன் அடையாளங்களையும், மொழியையும், வடக்கு கிழக்கில் உள்ள அவர்களின் பூர்வீக நிலங்களையும் அழிக்க முயலும் தமிழர் விரோத வேலைத்திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் உளவு அமைப்பு மொசாட் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்

இஸ்ரேல் உளவு அமைப்பு மொசாட் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்

நியூஸிலாந்தில் திருட்டு குற்றச்சாட்டில் பதவி விலகிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்

நியூஸிலாந்தில் திருட்டு குற்றச்சாட்டில் பதவி விலகிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US