முல்லைத்தீவு மக்கள் பிரதமர் ஹரினியிடம் விடுத்துள்ள கோரிக்கை
முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு அப்பகுதி மக்கள் பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பில் நேற்றையதினம் (04.11.2024) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் வைத்தே இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகளை விடுவித்துத் தருமாறு வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கடந்த மாதம் மனு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
மாபெரும் பொதுக்கூட்டம்
இதனையடுத்தே, நேற்றைதினம் பிரதமரிடம் மனு கையளிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நிகழ்வாக, “நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு” எனும் கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
