ஐ.நா விவகாரத்தில் மோடி அரசிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விசேட கோரிக்கை
ஈழத்தமிழர் தொடர்பாக கொண்டுவரப்படுகின்ற தீர்மானங்களில் இந்தியா தலைமைத்துவம் ஏற்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வீ.உருத்திரகுமாரன் கோரியுள்ளார்.
அத்துடன், ஈழத்தமிழர்களின் அரசியல் தலைவிதியினை ஈழத் தமிழர்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் அவர் வெளியிட்டுள்ள காணொளியொன்றிலே அவர் இதனைக்கூறியுள்ளார்.இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
தமிழர்களின் அரசியல் தலைவிதி தமிழர்களின் கைகளில் என்றதன் அடிப்படையில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை கோருகின்றோம்.
ஈழத்தமிழர் தொடர்பாக கொண்டுவரப்படுகின்ற தீர்மானங்களில் தலைமைத்துவம் ஏற்க வேண்டிய ஒரு தார்மீக பொறுப்பும், தார்மீக தகுதியும் இந்தியாவிற்கு தான் உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.