பேச்சு ஆரம்பமாக முன்னரே நிபந்தனைகள் வேண்டாம்: ரணில்
தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சு ஆரம்பமாவற்கு முன்னரே நிபந்தனைகளை தமிழர் தரப்பு விதிக்கக் கூடாது, முதலில் பேச்சு மேசைக்கு வாருங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் அரசியல் தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வரவு செலவு விவாதம் முடிவடைந்த பின்னர் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் சர்வகட்சி கூட்டம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஆராய்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
தீர்வு தொடர்பில் முடிவு
அவர் மேலும் தெரிவிக்கையில், பேச்சு ஆரம்பிக்க முன்னரே நிபந்தனைகளை முன்வைக்காதீர்கள். முதலில் பேச்சு மேசைக்கு வாருங்கள்.
முன்வர வேண்டிய தமிழ்த் தலைவர்கள்
பேச்சு மேசையில் பேசி, தீர்வு தொடர்பில் முடிவு எடுப்போம். என்ன பிரச்சினை என்றாலும் பேச்சு மூலம்தான் நல்ல தீர்வு கிடைக்கும்.
கிடைத்த நல்ல சந்தர்ப்பங்களைப் பயன்படுத்த தமிழ்த் தலைவர்கள் முன்வர வேண்டும். இந்நிலையில் கடந்த காலத் தவறுகளை மீண்டும் இழைக்காதீர்கள் என தெரிவித்துள்ளனர்.


மீண்டும் பதின்மூன்றா....! 1 நாள் முன்

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri
