வசாவிளானில் இராணுவ வைத்தியசாலை கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துங்கள்! அனுப்பப்பட்டுள்ள அவசர கடிதம்
யாழ்ப்பாணம் - வசாவிளான் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணியொன்றில், சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டு வரும் இராணுவ வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த 2026.06.09ஆம் திகதியிடப்பட்டு, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதிக்கு முகவரியிடப்பட்ட இக்கடிதத்தின் உத்தியோகபூர்வ பிரதி சட்டமா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தரப்பு நடவடிக்கை
நகர அபிவிருத்திச் சட்டத்தின் பிரிவு 23(5)இன் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தரால், அச்சட்டத்தின் 28A (1)ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட வேண்டிய இறுதி சட்டபூர்வ அறிவித்தலாகவே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலின்படி, எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்பாக இராணுவ வைத்தியசாலை கட்டுமானப் பணிகளை நிறுத்தி, காணியை விடுவிப்பதற்கு இராணுவத் தரப்பு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், பிரதேச சபைக்குரிய சட்ட அதிகாரங்களின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 1982ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க மற்றும் 1984ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க சட்டங்களின் மூலம் திருத்தப்பட்டவாறான நகர அபிவிருத்திச் சட்ட விதிமுறைகளின் கீழ், கட்டுமானத்துக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் தவிசாளர் சோ. சுகிர்தன் விடுத்துள்ள அறிவித்தல் கடிதத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரத்தக் கறை படிந்த கொலையாளிகள் இங்கு ஒருபோதும் தப்பிக்கவே முடியாது! பேராயர் கர்தினால் ரஞ்சித் சாட்டையடி