விமான எரிபொருள் தட்டுப்பாடு: நாட்டிற்கு வரும் விமானங்களுக்கு இலங்கையிலிருந்து விசேட அறிவிப்பு
இலங்கைக்கு வரும் விமானங்கள் தொடர்பில் சர்வதேச விமான நிறுவனங்களுக்கு விசேட அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
கோரிக்கை
அதன்படி இவ்வாறு இலங்கைக்கு வரும் போது தங்கள் விமானங்களின் எரிபொருள் தாங்கிகளை முழு கொள்ளளவில் வைத்திருக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் ரெஹான் வன்னியப்பா சர்வதேச விமான நிறுவனங்களிடம் கோரியுள்ளார்.
அல்லது வேறு இடத்தில் எரிபொருளை நிரப்பும் திட்டத்துடன் இலங்கை வருமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கான விமானங்கள் இரத்து செய்யப்படுகிறதா..! வெளியாகியுள்ள தகவல் |
அத்துடன், இலங்கையில் தற்போது விமான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக இலங்கைக்கான விமானங்களை இயக்கும் போது போதுமான அளவு விமான எரிபொருளுடன் வருமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்மாத இறுதியுடன் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்! |
ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானங்கள்
மேலும், ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானங்களுக்கான எரிபொருள் நிரப்பும் பணி தற்போது சென்னை மற்றும் துபாய் விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படுவதாக புளூம்பேர்க் செய்திச் சேவை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
பொருளாதார நெருக்கடியின் எதிரொலி! யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு ஏற்பட்ட நிலை |