பொருளாதார நெருக்கடியின் எதிரொலி! யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு ஏற்பட்ட நிலை
நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடியின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விமான நிலையம் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தது.
வட பகுதியில் உள்ள மக்கள் குறைந்த நேரத்தில் குறைந்த செலவுடன் தென்பகுதிக்கு வந்து செல்வதற்கும் தென்னிந்தியாவிற்கு சென்று வருவதை நோக்கமாக கொண்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்மாத இறுதியுடன் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்! |
கோவிட்டின் தாக்கம்
எனினும் 2020இல் இலங்கையில் கோவிட் தொற்று பரவல் ஏற்பட்ட நிலையில் இதன் தாக்கம் காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்துக்கள் இடைநிறுத்தப்பட்டன.
இந்த நிலைமை இன்று வரை தொடர்கின்ற நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தற்போதும் தமிழ் இளைஞர்கள் 16 பேர் உட்பட 30 பேர் வரை பணியாற்றி வருவதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான விமானங்கள் இரத்து செய்யப்படுகிறதா..! வெளியாகியுள்ள தகவல் |
கொடுப்பனவு
இந்த நிலையில் அவர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகளை குறித்த விமான நிலையத்தினை நிர்வகிக்கும் நிறுவனம் செலவிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து தற்போது விமான நிலையத்தினை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
என்ற போதும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்படுவதாக அரசாங்கத் தரப்பிலிருந்தோ அல்லது விமான நிலைய தரப்பினரிடமிருந்தோ எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.