அரசாங்கம் ராஜினாமா செய்து விட்டு நாட்டை சஜித் பிரேமதாசவிடம் வழங்குமாறு கோரிக்கை
உழவர்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியாது என்றால், அரசாங்கம் ராஜினாமா செய்து விட்டு சஜித் பிரேமதாச நாட்டை ஆட்சி செய்ய சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெத ஆராச்சி (Dilip Veda Arachchi) தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் உழவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
உழவர்கள் வீதியில் இறங்கினால், தற்போது அரசாங்கம் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும்.
நாடு முழுவதிலும் உள்ள உழவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி அவற்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் வெத ஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.