கொவிட் தடுப்பூசி வழங்கும் போது ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை
கொவிட் தடுப்பூசி வழங்கும் போது ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஊடக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனத்தினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொவிட் நோய்த் தொற்று பரவுகை தீவிரமடைந்துள்ள நிலையில் பெரும் எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
ஊடகவியலாளர்களும் தாய் நாட்டுக்காக அளப்பரிய சேவைகளை ஆற்றி வருவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வரும் ஊடகவியலாளர்கள் கொவிட் நோய்த் தொற்று தாக்கக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகவும் ஊடகவியலாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் தடுப்பூசி வழங்கும் தொழில்களின் பட்டியலில் ஊடகத்துறையையும் உள்ளடக்குமாறு சுகாதார அமைச்சிடம் ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் கோரியுள்ளது.






தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 18 மணி நேரம் முன்

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
