கொக்கிளாய் - புல்மோட்டை பாலம் அமைக்க கோரிக்கை: உறுதியளித்த பிமல் ரத்நாயக்க

Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Bimal Rathnayake
By Shan May 22, 2026 09:00 AM GMT
Report

முல்லைத்தீவு - கொக்கிளாய் மற்றும் திருகோணமலை - புல்மோட்டை ஆகிய பகுதிகளை இணைக்கும் இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கு 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்திற்குள் குறித்த கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பது தொடர்பான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் விமல் ரத்நாயக்க பதிலளித்துள்ளார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக் குழுவின் அர்ப்பணிப்பால் இளைஞர் காப்பாற்றப்பட்டார்!

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக் குழுவின் அர்ப்பணிப்பால் இளைஞர் காப்பாற்றப்பட்டார்!

கொக்கிளாய் - புல்மோட்டை பாலம் அமைக்க கோரிக்கை

நாடாளுமன்ற குழு அறையில் நேற்று(21.05.2026) இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.


இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், கொக்கிளாய் புல்மோட்டை இணைப்பு பாலம் அமைக்கப்படவேண்டும் என தொடர்ச்சியாக எம்மால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

கொக்கிளாய் - புல்மோட்டை பாலம் அமைக்க கோரிக்கை: உறுதியளித்த பிமல் ரத்நாயக்க | Request To Construct Kokkilai Pulmottai Bridge

அந்தவகையில், கடந்த 07.03.2025 அன்று இடம்பெற்ற 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சிவில் விமானசேவைகள் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் குறித்த பாலத்தை அமைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன்.

இதனைத் தொடர்ந்து 13.08.2025 ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது கொக்கிளாய் - புல்மோட்டை பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தேன்.

உறுதியளித்த அமைச்சர்

இந்நிலையில் 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதியால் என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய பாலத்தை அமைப்பதற்கான சாத்தியவள ஆய்வுகளை மேற்கொள்வதற்கு 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து சாத்திய வள ஆய்வுகளும் உரிய தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக வெளியேறுங்கள் - பல மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக வெளியேறுங்கள் - பல மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இத்தகைய சூழலில் கடந்த 11.02 2026 அன்று அமைச்சர் விமல் ரத்நாயக்க தலைமையில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற விசேட மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் குறித்த கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைக்குமாறு அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் மீண்டும் வலியுறுத்தியிருந்தேன்.

அந்தவகையில் குறித்த பாலத்தை அமைப்பதற்கான சாத்தியவள ஆய்வுகளை மேற்கொண்டுவரும் தரப்பினர், மே மாதத்திற்குள் அந்த சாத்தியவள ஆய்வுகளின் அறிக்கைகளை தம்மிடம் சமர்ப்பித்தால் குறித்த கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கு 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுமென அப்போது அமைச்சர் விமல் ரத்நாயக்க என்னிடம் உறுதியளித்திருந்தார்.

கொக்கிளாய் - புல்மோட்டை பாலம் அமைக்க கோரிக்கை: உறுதியளித்த பிமல் ரத்நாயக்க | Request To Construct Kokkilai Pulmottai Bridge

அதற்கமைய 15.05.2026 கடந்தவாரம் இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் குறித்த இணைப்புப் பாலத்தின் சாத்தியவள ஆய்வு அறிக்கை தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் வினவியிருந்தேன்.

இதன்போது குறித்த கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைப்பது தொடர்பான சாத்தியவள ஆய்வறிக்கையை தாம் அமைச்சிற்கு ஏற்கனவே அனுப்பிவிட்டதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளரால் என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று (21) நாடாளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி விடயங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில், குறித்த பாலத்தினை அமைப்பதற்கான சாத்தியவள ஆய்வு அறிக்கைகள் உரியதரப்பினரால் அமைச்சுக்கு அனுப்பப்பட்ட விடயத்தினைச் சுட்டிக்காட்டப்பட்டது.

வரவு செலவுத்திட்டத்தில் பாலம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு

அத்துடன், குறித்த கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கு 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் விமல் ரத்நாயக்க வலியுறுத்தியிருந்தேன். அதற்கமைய இதன்போது அமைச்சர் விமல் ரத்நாயக்க குறித்த கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்பு பாலம் அமைப்பது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் சபையிலேயே கலந்துரையிருந்தார்.

தொடரும் சீரற்ற வானிலை - சில பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தொடரும் சீரற்ற வானிலை - சில பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

குறிப்பாக இந்தப்பாலத்தை அமைப்பது தொடர்பில், ஏற்கனவே தம்மால் என்னிடம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட விடயத்தை இதன்போது சுட்டிக்காட்டி உரிய அதிகாரிகளிடம் ஆய்வறிக்கை முடிவுகளைக் கேட்டறிந்து கொண்டார்.

கொக்கிளாய் - புல்மோட்டை பாலம் அமைக்க கோரிக்கை: உறுதியளித்த பிமல் ரத்நாயக்க | Request To Construct Kokkilai Pulmottai Bridge

அத்தோடு எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்திற்குள் குறித்த கொக்கிளய் - புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பது தொடர்பான ஆரோக்கியமான முடிவுகளை எடுப்போமென அமைச்சர் விமல் ரத்நாயக்கவால் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் இந்தப் பாலம் முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்ட மக்களுக்கான பாலமென்பதால் அந்தப் பாலத்தை பயன்படுத்தப்போகின்ற அனைத்து மக்கள் சார்பாகவும் அமைச்சர் விமல் ரத்நாயக்க அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்திருந்தேன்.

அத்துடன், குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க மற்றும் வன்னிமாவட்ட அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரனுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் என்றார்.  


மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US