உள்நாட்டலுவல்கள் அமைச்சு முன்வைத்துள்ள கோரிக்கை
அடுத்த கட்டத் தடுப்பூசி வழங்கலின் போது அரச அதிபர்கள், பிரதேச செயலர்கள், கிராம சேவை அலுவலர்கள் மற்றும் கள அலுவலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல வேண்டாம் என கிராம சேவை அலுவலர்களிடம் உள்நாட்டு அமைச்சு கோரியுள்ளது.
இந்தக் கோரிக்கை இன்று இரவு விடுக்கப்பட்டுள்ளது.
எஸ்ட்ரா செனேக்கா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் அதில் ஒரு தொகுதியை அரச மருத்துவ அதிகாரிகளின் உறவினர்களுக்கு செலுத்தியதாக பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தினர் குற்றம் சுமத்தி இன்று மேல் மாகாணத்தில் அடையாளப்பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.
இதனையடுத்து முன்னிலை சுகாதார பணியாளர்களுக்கும் தமக்கும் தடுப்பூசிகளை வழங்காமல் அரச மருத்துவ அதிகாரிகளின் சங்க உறுப்பினர்களின் உறவினர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்று இரவு முதல் நாடளாவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக கிராமசேவையாளர் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனையடுத்தே உள்துறை அமைச்சு பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள வேண்டாம் என்றும்
அடுத்தக்கட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.