ஆற்றுப் பகுதியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மணல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை(Photos)
கிளிநொச்சி - அக்கராயன் ஆறு மற்றும் அதன் சூழல் பகுதிகளைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆற்றுப் பகுதியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மணல் மாவட்டத்தின் தேவைகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்புதல் சுபிட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் அடிப்படையில் உருவான இலங்கையில் உள்ள 103 ஆறுகளைப் பாதுகாக்கும் தேசிய சுற்றாடல் கருத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான ஆறுகளில் ஒன்றாகக் காணப்படுகின்ற அக்கராயன் ஆற்றினையும் அதன் சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும் வகையில் குறித்த வேலைத்திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் அக்கராயன் ஆற்றில் வெள்ள நீர் வழிந்தோடக் கூடிய வகையில் ஆற்றில் இருந்து அகற்றப்பட்ட பெருந்தொகையான மணல் தனியாருக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும், இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட மணலை பிரதேசசபையின் ஊடாக வழங்கப்படுவதாக ஆரம்பத்தில் தெரிவித்திருந்த போதும் தற்போது குறித்த மணலை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டுமான தேவைகளுக்கு மணலை பெற்றுக்கொள்வதில்
மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், இவ்வாறு பெருந்தொகையான
மணல் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri