மன்னாரில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண் தொடர்பில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
மன்னார் - தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான 27 வயதுடைய இளம் தாய் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் ஆட்களை மாற்றம் செய்யும் விசாரணையாக இருக்கக்கூடாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (07.08.2024) உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணைகள் மூலம் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில், வைத்தியசாலைக்கு 9 வைத்தியர்கள் வருகை தர உள்ளனர்.அவர்களுடைய பாதுகாப்பையும் நாம் எல்லோரும் சேர்ந்து உறுதிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு உறுதிப்படுத்தப்படாத நிலை ஏற்படுமாக இருந்தால் அந்த 9 வைத்தியர்களும் எமது வைத்தியசாலைக்கு வருவது கடினமானதாக இருக்கும்“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |