முதலமைச்சர் விஜயிடம் ஈழத்தமிழர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

Vijay Sri Lankan Tamils Tamils Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Theepan May 10, 2026 01:50 PM GMT
Report

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்யிடம் ஈழத் தமிழ் மக்களின் சார்பாகத் தமிழ்த் தேசியப் பேரவை கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. 

இது தொடர்பில் குறித்த தமிழ்த் தேசியப் பேரவை இன்று (10.05.2026) அனுப்பியுள்ள கடிதத்தில், 

”நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பாரிய சாதனையை முதற்தடவையிலேயே நிலைநாட்டி, தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தாங்கள் பதவியேற்றுள்ளமையையிட்டு தமிழ்த் தேசிய பேரவையினராகிய நாம் மீளவும் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டின் ஆட்சியைப் பொறுப்பேற்று நிற்கும் தங்களுக்குள்ள பாரிய பணிச்சுமைகளுக்கு மத்தியில் எமது கீழ்வரும் கோரிக்கையையும் கவனத்திற் கொள்ளுமாறு தயவுடன் கேட்டுநிற்கின்றோம்.

இலங்கை அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய தமிழினவழிப்பை நினைவுகூரும் வகையில், கடந்த 2009இற்குப் பின்னர் ஆண்டுதோறும் மே 18ஐ முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக ஈழத்தமிழ் மக்கள் பிரகடனம் செய்து, அந்நாளில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரமாக ஒன்றுகூடி நினைவு கூர்ந்து வருகின்றார்கள்.

சூடுபிடித்துள்ள தமிழக அரசியல் களம்..! முதலமைச்சர் விஜய் பதவியேற்றதும் அடுத்தடுத்து பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகள்

சூடுபிடித்துள்ள தமிழக அரசியல் களம்..! முதலமைச்சர் விஜய் பதவியேற்றதும் அடுத்தடுத்து பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகள்

முதலாவது சட்டமன்ற அமர்வு 

ஈழத்தமிழ் மக்களது மேற்படி நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், கடந்த 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்த அனைத்துக் கட்சிகளதும் ஆதரவுடன் ஈழத்தமிழர் மீது இடம்பெற்றது இனவழிப்பு என்றும், அதற்குச் சர்வதேச குற்றவியில் விசாரணை அவசியம் என்றும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

முதலமைச்சர் விஜயிடம் ஈழத்தமிழர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | Request On Eelam Tamils To Cm Vijay

அந்நேரத்தில் தங்களது கட்சி நிறுவப்பட்டிருக்கவில்லை ஆயினும், அதன் பின்னர் தமிழக வெற்றிக்கழகம் தோற்றம் பெற்று, அதன் முதலாவது தேர்தலில் பெருவெற்றியீட்டி தாங்கள் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளீர்கள்.

இந்நிலையில் தாங்களும் தங்களது தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கமும் ஈழத்தமிழர் மீது இடம்பெற்றது இனவழிப்பு அதற்குச் சர்வதேச குற்றவியில் விசாரணை அவசியம் என்ற அதே நிலைப்பாட்டிலே மிகவும் இறுக்கமாகவும் உறுதியாகவும் பயணிப்பீர்கள் என்ற செய்தியை அனைத்துத் தரப்புகளுக்கும் வழங்கும் வகையில், மேற்படி 2013ஆம் ஆண்டு சட்டசபைத் தீர்மானத்தையொட்டிய ஓர் தீர்மானத்தை, இம் மே மாதத்தில் கூடும் தமிழ்நாடு சட்டசபையின் ஆரம்ப அமர்விலேயே தங்களது தலைமையில் நிறைவேற்றுவது ஈழத்தமிழ் விவகாரத்தில் தமிழ்நாட்டில் ஓர் தொடர்ச்சியான உறுதியான நிலைப்பாடு உள்ளமையை வெளிப்படுத்துவதாக அமையும்.

அதன் மூலம், ஈழத் தமிழினம் மீது நீங்கள் காட்டும் அக்கறையானது, கொடிய இனவழிப்புக்கு சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்திவரும் ஈழத்தமிழர்களுக்கு வலுச் சேர்ப்பதாகவும் அமையும் என்பதுடன் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர் இதயங்களில் நீங்காத இடத்தை தங்களுக்கு வழங்கும் என்பதையும் தெரிவித்து, மீண்டும் எமது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளது. 

பணம் இல்லையென ஆரம்பித்த உடனே கூறவேண்டாம்..! முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

பணம் இல்லையென ஆரம்பித்த உடனே கூறவேண்டாம்..! முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்தின் அரசியல் புரட்சியும் ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலமும்

தமிழகத்தின் அரசியல் புரட்சியும் ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலமும்


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US