தேவையற்ற செயற்கை தட்டுபாடுகளை ஏற்படுத்த வேண்டாம்.. மக்களிடம் கோரிக்கை
நாடு சீரடைந்து வரும் நிலையில் தேவையற்ற செயற்கை தட்டுபாடுகளை ஏற்படுத்தவேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேவையற்ற வகையில் பெற்றோலை சேகரிக்கும் போது அது அத்தியாவசிய தேவையாகவுள்ளவர்களின் செயற்பாடுகளை பாதிக்கும் நிலையேற்படும் எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போலியாக பரவிவரும் செய்திகளைக்கொண்டு மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் நிற்பதை காணமுடிகின்றது.
எரிபொருள் தட்டுப்பாடு
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போவதாக சிலர் போலியாக தெரிவித்துவரும் கருத்துகளைக்கொண்டு மட்டக்களப்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளை காணமுடிகின்றது.

முச்சக்கர வண்டிகளும் மோட்டார் சைக்கிள்களும் அதிகளவில் வரிசையில் நின்று எரிபொருளை பெறுவதன் காரணமாக அவசரத்தேவைக்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருவோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேவையான எரிபொருட்கள் கையிருப்பில் உள்ள நிலையில் பொதுமக்கள் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லையென மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri