நீர் பயன்படுத்தும் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போதைய வறண்ட வானிலையை முன்னிட்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் தலைவர் சந்தன பண்டார ஊடகங்களிடம் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தங்கம் வாங்க மகிழ்ச்சியாக காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம்! குறைந்த வேகத்தில் சடுதியாக அதிகரிக்கும் பெறுமதி
தண்ணீர் விநியோகத்தில் சிரமங்கள்
மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்திலும் வறண்ட வானிலை தொடர்ந்து மோசமடைந்தால், தண்ணீர் விநியோகத்தில் சில சிரமங்கள் ஏற்படக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் நீருக்கு நெருக்கடி நிலை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிலும் குறிப்பாக மலையகத்தில் நீருக்காக இயற்கை ஆதாரங்களை நம்பி வாழும் மக்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri