பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
பேக்கரி உற்பத்தியாளர்கள் தமது தொழிலை தொடர முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே அரசாங்கம் மாவு, முட்டை மற்றும் வெண்ணெய் ஆகியவற்றின் விலைகளைக் கட்டுப்படுத்தி பேக்கரி உற்பத்திகளின் விலைகளை பெருமளவு குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பேக்கரி உற்பத்தி முடங்கும் அபாயம்
பேக்கரி உற்பத்தியாளர்கள் தமது தொழிலை தொடர முடியாத நிலைமைக்கு வந்துள்ளனர். முட்டை ,கோதுமை மாவின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
எனவே, பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான மூலப்பொருட்களை நியாய விலையில் வழங்கினால் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.