அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

Covid-19 Kilinochchi Covid vaccine
By Sudaron May 27, 2021 04:45 PM GMT
Report

கோவிட் சிகிச்சை நிலையங்களில் பணியாற்றும் உள்ளுராட்சி மன்ற சுகாதார ஊழியர்களிற்கு தடுப்பூசி வழங்குவதுடன், விசேட கொடுப்பனவையும் வழங்குங்கள் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த சங்கத்தின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சங்கத்தின் வடமாகாண இணைத் தலைவர் ஆறுமுகம் புண்ணியமூர்த்தி குறித்த ஊடகவியலாளர் சந்திப்பினை இன்று ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கில் 2000க்கு மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் நிரந்த நியமனம் இல்லாது சேவையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் அனைவரும் உள்ளுராட்சி மன்றங்களில் பணியாளர்களாக 3 ஆண்டுகளிற்கு மேல் சேவையில் ஈடுபடுகின்றனர்.

தற்போது உள்ள கோவிட்- 19 அச்சுறுத்தல் நிறைந்த சூழலிலும் அவர்கள் தமது சுத்திகரிப்பு பணிகளை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கோவிட் தடுப்பு ஊசியை அவர்களிற்கு வழங்க முன்வர வேண்டும் என நாங்கள் கோரிக்கை முன்வைக்கின்றோம்.

அத்துடன் அவர்களின் குடும்பங்களிற்கும் குறித்த தடுப்பு ஊசியைச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களிற்கு இலகுவாகத் தொற்று பரவக்கூடிய சூழல் காணப்படும் நிலையில் தடுப்பூசியை அவர்களிற்குச் செலுத்த வேண்டும்.

அத்துடன், நிரந்தர நியமனம் இல்லாது சேவையில் ஈடுபடும் ஊழியர்களிற்கான நிரந்தர நியமனத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைக்கின்றோம்.

உள்ளுராட்சி மன்றங்களில் பணி புரியும் சுத்திகரிப்பு ஊழியர்கள் கோவிட் சிகிச்சை நிலையங்களிலும் கடமையில் ஈடுபடுகின்றனர்.இவ்வாறான நிலையில் அவர்களிற்கு இலகுவாகத் தொற்று ஏற்படக்கூடிய நிலை காணப்படுகின்றது. அவர்களிற்கு கோவிட் தடுப்பு ஊசியைச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அத்துடன், அவ்வாறு கடமையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிற்கு விசேட கொடுப்பனவினையும் வழங்க முன்வர வேண்டும் எனவும் நாங்கள் கோரிக்கை முன்வைக்கின்றோம்.

ஏனெனில், மிக முக்கியமான காலப்பகுதியில் அவர்கள் கடமையில் ஈடுபடுகின்றனர். அவர்களின் சேவையை ஊக்குவிக்கும் வகையில் குறித்த விசேட கொடுப்பனவை அவர்களிற்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US