இலங்கை மக்களிடம் மின்சார சபை விடுக்கும் கோரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் மின்சார நெருக்கடியை கருத்தில் கொண்டு பொது மக்களிடம் இலங்கை மின்சார சபை முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
அதற்கமைய மின்சார அடுப்புகளை பயன்படுத்தி உணவு தயாரிக்கும் நுகர்வோர் மாலை 6 மணிக்கு முன்னதாக உணவை தயார் செய்து கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கையின் மூலம் மின்சாரத் தடைகளை குறைக்க முடியும் என சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஐந்து நாட்களுக்கும் மேலாக இடைக்கிடையே மின்சாரம் தடைப்படலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய தினம் மாலை 6.30 - 10.30 மணி வரையான காலப்பகுதியினுள் நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் ஜெனரேட்டரில் ஏற்பட்டுள்ள கோளாறு அதற்கு காரணமாகும் என கூறப்படுகின்றது.
போர் காலத்தில் கூட இப்படி நடக்கவில்லை! - சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
தனது திருமண புகைப்படங்களை முதன்முறையாக வெளியிட்ட பிக்பாஸ் புகழ் ஜுலி... புகைப்படங்கள் இதோ Cineulagam
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri