நல்லூர் ஆலய திருவிழா: யாழ். மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை (Live)
யாழ்ப்பாணம் - நல்லூர் ஆலய சூழலில் விசேட கண்காணிப்புக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொது மக்களிடம் யாழ். மாவட்ட பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளார்.
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தனின் வருடாந்த உற்சவம் நேற்று திங்கட்கிழமை (21.08.2023) முதல் ஆரம்பமாகித் தொடர்ந்து 25 நாட்களுக்குத் திருவிழா நடைபெறவுள்ளது.
இன்றைய தினமும் (22.08.2023) சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
அந்த நாட்களில் நல்லூர் ஆலய வளாகத்தில் பொலிஸார் மற்றும் யாழ்ப்பாண மாநகரசபையினால் விசேட வீதி நடைமுறைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
உடமைகளை வேண்டும்
எனவே, அந்த செயற்பாட்டிற்குப் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்வின் வழிகாட்டுதலின் கீழ், நல்லூர் ஆலய சூழலில் பொலிஸார் சிவில் உடையிலும், சீருடையிலும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், பொதுமக்கள் தங்களுடைய உடமைகளை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் வீடுகளை நன்றாகப் பூட்டி தங்களுடைய வீடுகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி ஆலயத்திற்கு வந்து செல்ல வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



