இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவியுங்கள்! - பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
இரு வீடுகளை உடைத்து பணம் மற்றும் சொத்துக்களை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொரதொட்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றை உடைத்து 2 மில்லியன் ரூபா பணம் மற்றும் நகைகளை சந்தேகநபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் கடந்த 9ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
மற்றைய சந்தேகநபர் நேற்று பொம்ரியா பகுதியில் உள்ள வீடொன்றில் திருடிய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வருகின்றார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை பொலிஸா ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
OIC நவகமுவ - 071 - 8591652
OIC (குற்றம்) - 076 - 9452002
நவகமுவ பொலிஸ் நிலையம் - 011 - 2415222





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
