மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

Human Rights Commission Of Sri Lanka Sri Lankan Tamils Northern Province of Sri Lanka
By Bavan Feb 21, 2024 08:11 PM GMT
Report

இதுவரை வெளியிடப்படாத மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனைத்து அறிக்கைகளையும் ஜனாதிபதி இணயத்தளத்தில் வெளியிடுமாறு அரசாங்கத்திடம் 4 அரச சார்பற்ற நிறுவனங்கள் கூட்டாக இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளன.

பெண்கள் பிரிவு வலையமைப்பு, மனித உரிமைக்கும் வளர்ச்சிக்குமான நிலையம், பன்னாட்டு உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் ஆகிய 4 அமைப்பினர் கூட்டாக இணைந்து வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக விசாரணைக்காக 1956 தொடக்கம் 2022 யூன் 6ஆம் திகதிவரை 36 ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டும் 14 ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை.

தமிழ் எம்.பிக்கள் இடையே நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கடும் மோதல்

தமிழ் எம்.பிக்கள் இடையே நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கடும் மோதல்

காணாமற்போனவர்களின் உறவினர்கள்

எனவே புதிய உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை உருவாக்குவதற்கு முன், முன்னைய ஆணைக்குழுக்களை அங்கீகரிக்க வேண்டும்.

இலங்கையில் பாரதூரமான மனித உரிமைமீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்ட அரசாங்க ஆணைக்குழுக்களின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்ட இலங்கையர்களால் கணக்குவைக்க முடியாத எண்ணிக்கைகளைத் தாண்டியுள்ளது. இருந்தும் பிறிதொரு ஆணைக்குழு உருவாக்கப்படவுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் | Request For Reports Of The Human Rights Commission

உண்மை, ஐக்கியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எனப்படும் இந்த புதிய ஆணைக்குழு, உண்மையைக் கண்டறிவதற்காக இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட குறைந்தது 36 ஆணைக்குழுக்களைக் கொண்ட வரிசையில் புதிதாக இணைந்துள்ளது.

எனினும், நீதியும் பொறுப்புக்கூறலும் மழுப்பலானதாகவே தொடர்ந்தும் இருந்துவருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

உரிய நடவடிக்கைகளை எடுக்கக்கோரி, காணாமற்போனவர்களின் குடும்பங்கள் துணிகர வீதிப்போராட்டங்களை ஆரம்பித்து இன்று எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.

தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே 240இற்கும் மேற்பட்ட வயதுமுதிர்ந்த உறவினர்கள் உயிரிழந்துள்ளனர்.

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட இந்த புதிய உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிராகரித்து 37 குடியியல் சமூக அமைப்புக்களும் 19 செயற்பாட்டாளர்களும் ஏற்கனவே வெவ்வேறு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

கடந்த கால ஆணைக்குழுக்கள்

கடந்தகாலப் பொறிமுறைகளின் மோசமான தோல்வி, ஆவணங்களைப் பகிரங்கப்படுத்தத் தவறியமை மற்றும் புதிய கட்டமைப்பிற்கான போதுமான அதிகாரமின்மை ஆகியவற்றை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் 1956 நவம்பர் முதலாம் திகதி கிழக்கு மாகாணத்தில் குடியில் கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு முதலாவது ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் | Request For Reports Of The Human Rights Commission

அதனை தொடர்ந்து, 2022 மார்ச் 31இற்கும் மே 15 இற்கும் இடையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தீவைப்பு, கொள்ளை மற்றும் களவு ஆகிய அனைத்து வடிவ நாசவேலைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக 36ஆவது ஆணைக்குழு அமைக்கப்பட்டது. 

இந்த 36 ஆணைக்குழுக்களில் 14 ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை என்பது அதிர்ச்சியானது என்பதுடன் பெரும்பாலான ஆவணங்கள் அரசாங்க இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும், வெறும் ஒருசில ஆணைக்குழுக்களின் அறிக்கைகளே அந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

உண்மையில், கடந்த கால ஆணைக்குழுக்களால் வெளியிடப்பட்ட 22 அறிக்கைகளில், வெறும் 11 அறிக்கைகளின் பிரதிகள் மட்டுமே எம்மால் கண்டுபிடிக்க முடிந்தது.

மேலும், கடந்த காலங்களில், என்ன நடந்தன என்பதை நிறுவுவதற்கான விசாரணை வடிவங்களே மேற்கொள்ளப்பட்டதே அன்றி  குற்றத்திற்குக் காரணமானவர்களைப் பொறுப்புக்கூறவைப்பதற்காக அல்ல. இதனால், அதே நபர்களால் மீண்டும் மீண்டும் பெரும் அநீதிகள் மேற்கொள்ளப்பட வழிவகுத்தது.

கடந்தகால அறிக்கைகள்

இலங்கை ஜனாதிபதி அண்மையில் பரிந்துரைத்துள்ள பொறுப்புக்கூறல் முயற்சி தொடர்பான கடுமையான கவலைகளை இது எழுப்புகின்றது.

ஜனாதிபதியின் இணையத்தளத்தில் கடந்தகால ஆணைக்குழுக்களின் அறிக்கைகளைப் பதிவேற்றம் செய்வதன் மூலமாக அவற்றின் உள்ளடக்கங்களை அங்கீகரிப்பதே உண்மையை நோக்கிய முதலாவது படியாக அமையும்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் | Request For Reports Of The Human Rights Commission

நேர்மைத்தன்மையுடன் செயற்படுவதற்கு, பத்தலந்த சித்திரவதைக்கூடத்தில் நடந்த சித்திரவதைகளும் தடுத்து வைப்புக்களும் ரணில் விக்ரமசிங்கவிற்குத் தெரியாமல் நடந்திருப்பது சாத்தியமில்லை என்று கூறும் பத்தலந்த ஆணைக்குழுவின் அறிக்கை போன்ற, ஜனாதிபதியின் பெயரையும் உள்ளடக்கும் அறிக்கைகளையும் இதில் உள்ளடக்கவேண்டும்.

இதுவரை, வெளியிடப்படாத அறிக்கைகளை வெளியிடும்படியும், கடந்த கால அறிக்கைகள் அனைத்தையும் பின்வரும் ஜனாதிபதி இணயத்தளத்தில் வெளியிடும்படியும் இலங்கை அரசாங்கத்தை நாங்கள் வேண்டிக் கொள்வதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தமிழர்களிடம் வாக்கு கேட்க முன் ஜே.வி.பி மன்னிப்பு கோர வேண்டும்: சபா குகதாஸ்

தமிழர்களிடம் வாக்கு கேட்க முன் ஜே.வி.பி மன்னிப்பு கோர வேண்டும்: சபா குகதாஸ்

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் கிரிக்கெட் பிரபலம்

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் கிரிக்கெட் பிரபலம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், திருநெல்வேலி

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US