முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவை உருவாக்குமாறு கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தீயணைப்பு பிரிவு ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு வர்த்ததகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்ணீரூற்று முள்ளியவளை பகுதியில் புடவையகத்தோடு கூடிய இலத்திரனியல் பொருட்கள் திருத்தகம் ஒன்றில் நேற்று (10.01.2023) அதிகாலை தீப்பரவல் எற்பட்டது.
தீ ஏற்பட்டதை அவதானித்த அருகில் உள்ளவர்கள் ஒன்று கூடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தாலும் வர்த்தக நிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்துள்ளன.
தீயணைப்பு பிரிவு
இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதோடு கிளிநொச்சி பொலிஸார் தடயவியல் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
எனினும், முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக தீ விபத்துக்கள் இவ்வாறு தீ விபத்துக்கள் ஏற்படுகின்ற நிலையில் சொத்துக்களும் பாரியளவில் அழிவடைகின்றன.
இதற்கு தீயணைப்பு பிரிவு இல்லாமையே பாரிய சவாலாக காணப்படுகின்றது. ஆகவே, விரைவில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தீயணைப்பு பிரிவு ஒன்றை உருவாக்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam
