தமிழர் பகுதியில் தமிழுக்கு உருவாகியுள்ள நிலைமை
ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள மாங்குளம் வைத்தியசாலையின் பெயர் பலகையில் உள்ள தமிழ் எழுத்து பிழையை திருத்துமாறு சமூக ஆர்வலர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவப் புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம் மாங்குளம் ஆதார வைத்தியசாலை வளாகத்தை அண்டிய பகுதியிலே அமைக்கப்பட்டு எதிர்வரும் 26ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.
திறப்பு விழா
இந்நிலையில், வைத்தியசாலை முன்பாக அமைக்கப்பட்டிருக்கின்ற பெயர் பலகையில் மாங்குளம் என்பது தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டிருப்பதாகவும் இதனை மாற்றுமாறு பல தடவைகள் உரியவர்களுக்கு தெரியப்படுத்தியும் இன்றுவரை அது மாற்றப்படவில்லை.
மேலும், திறப்பு விழாக்கு முன்னதாக எழுத்துப்பிழையினை சரி செய்து பெயர்ப் பலகையினை மாற்றி திறப்பு விழாவினை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலதிக செய்தி - கீதன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
