திருகோணமலை - கொழும்பு சொகுசு பேருந்து கட்டண வேறுபாடுகளை சீர்செய்யுமாறு கோரிக்கை!
திருகோணமலை - கொழும்பு சொகுசு பேருந்து கட்டண வேறுபாடுகளை சீர்செய்யுமாறுகிண்ணியா கல்வி அபிவிருத்திச் சங்கச் செயலாளர் கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தவிசாளரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தவிசாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகள் பயணிகளிடமிருந்து வெவ்வேறான கட்டணங்களை அறவிட்டு வருகின்றன.
குறிப்பாக, ஒரு பேருந்து வண்டியில் 1,600 ரூபாயும், மற்றொன்றில் 1,730 ரூபாயும் அறவிடப்படுகிறது. அதேவேளை, சில பேருந்துகள் 1,800 ரூபாயையும், மற்றும் சில 2,370 ரூபாயையும் கட்டணமாக வசூலிக்கின்றன.
கோரிக்கை
ஒரே தூரத்திற்குச் செல்லும் வாகனங்கள் இவ்வாறான பாரிய கட்டண வேறுபாடுகளைக் கொண்டிருப்பது முறையற்றது மாத்திரமன்றி, இதில் எந்தவித நியாயமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி இந்த தனியார் சொகுசு பேருந்து கட்டணங்களை முறையாக ஆய்வு செய்து, ஒரு சீரான கட்டண முறையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் அந்த கடிதத்தின் மூலம் போக்குவரத்து அதிகார சபையிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri