பதவி இழந்ததாக செய்திகள் வெளியான போதிலும் சபை நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரதித்தவிசாளர் (Photos)
கட்சிக்கு எதிராக செயற்பட்டதால் ஏறாவூர் நகர சபையின் பிரதித் தவிசாளர் ரெபுபாசத்தை, கட்சியிலிருந்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இலங்கை சுதந்திரக் கட்சி அவரை நீக்கியுள்ளதாக கடந்த ஞாயிறன்று செய்திகள் வெளியாகியிருந்தது.
இருப்பினும் இன்று இடம்பெற்ற ஏறாவூர் நகர சபையின் 45வது மாதாந்தக் கூட்டத்தில் அவர் வழமைபோன்று பங்குபற்றினார்.
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது, இலங்கை சுதந்திரக் கட்சியின் சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எல்.ரெபுபாசம், பட்டியல் ஆசனத்தினூடாக ஏறாவூர் நகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்டவராவார்.
நகர சபைத் தவிசாளர் தெரிவின்போது கட்சியினுடைய தீர்மானத்தை புறக்கணித்தும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கட்சியின் கொள்கை மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் செயற்பட்டதால் அவருக்கெதிராக சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்டது.
மேற்படி ஒழுக்காற்று விசாரணைகளின் தீர்ப்பையடுத்து இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு, அவரது கட்சி உறுப்புரிமையை இரத்துச்செய்து கட்சியில் இருந்து அவரை வெளியேற்றியுள்ளது என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியாகியிருந்தது.
இதன்படி, ஏறாவூர் நகர சபையில் இலங்கை சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த உறுப்பினரின் பதவி நீக்கப்பட்டமை குறித்து, அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மட்டக்களப்பு மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலருக்கு கடிதம் ஊடாக அறிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில் அவர் இன்று ஏறாவூர் நகர சபையின் தவிசாளர்
எம்.எஸ். நழிம் தலைமையில் இடம்பெற்ற அச்சபையின் 45வது அமர்வில்
பங்குபற்றியிருந்தார்.





தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
