ஜனாதிபதியை சந்தித்த நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி வங்க்யோங்க் ரி. பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஹேன் மேரி கல்ட் வூல்ப் மற்றும் இலங்கை - மாலைதீவு நாடுகளுக்கான நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி கலாநிதி டுபாகஸ் பெஃரிடானுசேட்யாவன் ஆகியோர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, மேலதிக செயலாளர் சந்திம விக்ரமசிங்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.
இலங்கை போது இலங்கையின் பொருளாதார நெருக்கடி, டொலர் தட்டுப்பாடு மற்றும் இலங்கைக்கு தேவையான கடனுதவிகள் உட்பட முக்கிய விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்திற்கு விஜயம் செய்ய உள்ளார். அப்போது இலங்கையின் யோசனைகளை நிதியத்திடம் கையளிக்க உள்ளார்.



