அரசியலமைப்புப் பேரவையின் சிவில் சமூக பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவு
அரசியலமைப்புப் பேரவையில் சிவில் சமூகப் பிரதிநிதிகளாக தற்போதைக்குக் கடமையாற்றுவோரின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது.
அரசியலமைப்புப் பேரவையில் தற்போதைக்கு சிவில் சமூகப் பிரதிநிதிகளாக விசேட மருத்துவ நிபுணர் அனுலா விஜேசுந்தர, தினூஷா சமரதுங்க, பிரதாப் ராமானுஜம் ஆகியோர் பதவி வகித்துக் கொண்டிருக்கின்றனர்.
அரசியலமைப்புப் பேரவையின் பிரதிநிதிகள்
அரசியலமைப்புப் பேரவையின் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் மூன்று வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்வரும் ஜனவரி 02ம் திகதியுடன் இவர்களின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது.

கடந்த ரணில் விக்ரமசிங்க அரசாங்க காலத்தில் அரசியலமைப்புப் பேரவையின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்ட இவர்கள், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் பொருத்தமற்ற நபர்களுக்கு உயர் பதவிகளை வழங்க முனைந்தபோது அதற்கு எதிராக தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
இந்நிலையில் குறித்த மூவரின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளமை குறித்து சிவில் சமூக அமைப்புகள் கரிசனை வெளிப்படுத்தியுள்ளதுடன், அவர்களைப் போன்றே துணிச்சலான மற்றும் சுயாதீனமாக செயற்படத்தக்க பிரதிநிதிகள் மீண்டும் அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
கொழும்பு மாநகரசபையின் பட்ஜெட்டை எதிர்க்க தலைக்கு 150 லட்சமா! என்பிபியிடம் கொடுக்கல் வாங்கல் டீல் இல்லை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |