அபுதாபியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல்
தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர் ஒருவர் அபுதாபியில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 13 ஆண்டுகளாக குறித்த சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
ராசநாயகம் தவதேசன் என்ற பெயருடைய சந்தேகநபரே இவ்வாறு அபுதாபி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் அபுதாபியில் கைது! சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் |
சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச பிடியாணை
கொழும்பில் இடம்பெற்ற ஆறு குண்டுத் தாக்குதல் சம்பவங்களை இந்த சந்தேகநபர் வழிநடத்தியுள்ளதாகவும், இவருக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அபுதாபியில் கைது செய்யப்பட்ட ராசநாயகம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராணுவத்தினரால் கைது
இந்த தாக்குதல்களை நடத்த கட்டளையிட்ட விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர்களில் ஒருவரான மொரிஸ் என்ற நபரையும் இராணுவம் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த இருவரும் எப்போது கைது செய்யப்பட்டனர் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
