தலைமறைவாகியுள்ள ஜோன்ஸ்டனின் வாகனம் தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை
தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமான சட்டவிரோதமான முறையில் ஒருங்கினைக்கப்பட்ட சொகுசு வாகனமானது இரண்டு வருடங்களாக அவர் பயன்படுத்தியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் தனுஜா லக்மாலியிடம் விசாரணை அதிகாரிகள் உண்மைகளை அறிக்கையிட்டதுடன், தெல்தெனிய, கெங்கால் தெருவைச் சேர்ந்த காமினி அபேரத்ன என்ற “டாக்சி அபே” என்பவரிடம் மேற்படி கார் தொடர்பில் நீண்ட வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தனியார் ஹோட்டல்
எவ்வாறாயினும், தாம் வாகனங்கள் மற்றும் காணிகளை விற்பனை செய்யும் வர்த்தகர் எனவும், கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலின் 9வது மாடியில் உள்ள அறையில் கடந்த 8 வருடங்களாக தங்கியிருப்பதாகவும் டாக்சி அபே குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்திருந்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தம்மை அழைத்து குறித்தகாரை சில நாட்கள் நிறுத்துவதற்கு இடம் தருமாறு கூறியதாகவும் அதன் பிரகாரம் இந்த காரை ஹோட்டலுக்கு கொண்டு வந்ததாகவும் விசாரணை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுமார் இரண்டு வருடங்களாக ஒரே மாதிரியான கறுப்பு நிற காரையே பயன்படுத்தியமை தாம் அறிந்துள்ளதாக டாக்சி அபேயின் வாக்குமூலத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |