பங்குச்சந்தை மோசடி : முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் மீது குற்றச்சாட்டு
கொழும்பு பங்குச் சந்தையில் கடந்த காலத்தில் நடைபெற்ற மோசடிச் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது
கடந்த 2021ம் ஆண்டு, அப்போதைய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவரை கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) இயக்குநராக மூலோபாய ரீதியாக நியமனம் செய்ய சிபாரிசு செய்திருந்தார்
பங்குதாரர்களின் அதிக வருமானம்
மூலோபாய விற்பனையைத் திட்டமிடுவதற்கு முன், இலக்கு வைக்கப்பட்ட நிறுவனங்களின் பங்கு விலைகளை செயற்கையாக உயர்த்துவதன் மூலமும் பங்குச் சந்தையைக் கையாள்வதன் மூலமும், தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குதாரர்களின் அதிக வருமானம் ஈட்டிக் கொள்ளும் வகையில் செயற்பட்டதாக, குறிப்பிட்ட பணிப்பாளர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அதுமாத்திரமன்றி குறித்த நபர் தனக்கு வேண்டிய நிறுவனமொன்றின் பங்குகளை செயற்கையாக அதிகரிக்க வைத்து, அதில் கணிசமான இலாபம் பெற்றிருந்தார்.
இந்த விடயங்கள் அனைத்தும் அன்றைய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குத் தெரிந்தே நடைபெற்றதாக கூறப்படுகின்றது.
வழக்கொன்று தாக்கல்
எனினும் குறித்த நபர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வழங்க வேண்டிய இலாபப் பங்கையும் சேர்த்துச் சுருட்டிக் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது
அதன் காரணமாக பங்குச் சந்தை மோசடியில் தான் எதிர்பார்த்த பங்கு இலாபம் கிடைக்காத நிலையில், பங்குச் சந்தைக்கு தனது சிபாரிசின் பேரில் நியமிக்கப்பட்டவரை பதவி விலகுமாறு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அழுத்தம் கொடுத்திருந்தார்.
தற்போதைக்கு இந்த விடயம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், மிக விரைவில் இது தொடர்பிலும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக விரைவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ளது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |