தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை விமர்சித்த அருட்தந்தை மா.சத்திவேல்

Sri Lankan Tamils Sri Lanka Government Of Sri Lanka
By Shan Oct 12, 2024 05:01 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்க வாய்ப்பில்லை என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (12.10.2024) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும், 

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தல் எனும் தலைப்பிலான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51/1 இலக்க தீர்மானத்தினை ஏற்க மாட்டோம் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான இடைக்கால அரசும் தீர்மானித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும் அறிவித்துள்ளது. இது வியப்பிற்குரிய விடயமல்ல.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேசிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேசிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

மீள் பரிசீலனை

ஆனால், தெற்கின் மாற்றத்திற்கான அரசியலோடு நாமும் இணைவோம் எனக் கூறி தேசிய மக்கள் சக்தியின் கட்சி சின்னத்தில் வடக்கு கிழக்கில் வாக்கு கேட்பவர்களும் மாற்றம் எனும் முகத்தோடு சுயேட்சையாக வாக்கு கேட்பவர்களும், தமிழர்களின் வாக்குகளால் வென்ற பின்னர் அரசுக்கு முண்டு கொடுப்போம் என சிந்தித்து கொண்டு இருப்பவர்கள் தங்கள் முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு கேட்கின்றோம்.

இல்லையேல், முள்ளிவாய்க்கால் இரண்டுக்கு வழி வகுத்த தமிழ் இனத்துரோகிகளாக வரலாற்றில் இடம் பிடிப்பீர்கள் என்பதையும் கூற விரும்புகின்றோம்.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையை தேசிய மக்கள் சக்தியினர் பயன்படுத்தி சிங்கள பௌத்த பேரினவாதிகளும் அவர்களால் கட்டமைக்கப்பட்டுள்ள படைத்தரப்பினரும் வடக்கு கிழக்கின் வாக்குகள் இன்றி எங்களை வெல்ல வையுங்கள் என்று நேரடியாக கூறுவதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 3/2 பெரும்பான்மை ஆசனங்களை குறிவைத்து தேசிய மக்கள் சக்தி கவர்ச்சி அரசியலை செய்து வரும் சூழ்நிலையே ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திற்கு பதில் அளித்துள்ளதன் மூலம் தமிழர் விரோத போக்கை வெளிப்படையாகவே கையில் எடுத்துள்ளதோடு தமது அரசுக்கு பேரினவாத கருத்தியல் கொண்டவர்களும் அவர்களினால் கட்டமைக்கப்பட்ட படையினரும் தமக்கு பாதுகாப்பு கவசமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை விமர்சித்த அருட்தந்தை மா.சத்திவேல் | Criticism On Npp Govt

அரசியல் யாப்பில் கொடுக்கப்பட்டுள்ள பௌத்தத்திற்கான முன்னுரிமையை நாம் பாதுகாப்போம் என ஏற்கனவே தேசிய மக்கள் சக்தியினர் கூறியுள்ளதோடு இடைக்கால அரசாங்கம் அமைத்ததும் பௌத்த தலைமைகளை தேடி தேடிச் சென்று உங்கள் கட்டுக்குள் இருப்போம் என்பதன் அடையாளமாக தங்கள் கைகளில் பிரித்து நூலை கட்டிக் கொள்வதோடு அவர்கள் காலில் விழுந்து ஆசியும் பெற்றுக் கொள்கின்றனர்.

இங்கு பக்திக்கு அப்பால் அரசியலே மேலோங்கியுள்ளது எனலாம். கடந்த 1971 மற்றும் 1988 /89 காலப்பகுதியில் தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி, அரசுக்கு எதிராக மேற்கொண்ட போராட்டத்தின் போது, முன்னணியினரின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் சித்திரவதைக்குள்ளாகி கொல்லப்பட்டனர்.

சமூக புதைக்குழிக்குள் தள்ளப்பட்டனர். இதனை செய்த படையினரை அடையாளம் காட்டி நீதி கேட்க இன்றுவரையுமா துணியவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமது அரசியலுக்காக ஊடகவியலாளர் திஸ்சநாயகம் (இவரை 20 வருட சிறைக்குள் தள்ளிய மகிந்த சர்வதேச அழுத்தத்தின் காரணமாக விடுதலை செய்தது பழைய கதை) தயாரித்த அறிக்கையை ஐ.நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கொண்டு சென்று நீதி கேட்ட காலமும் உண்டு.

பலமான மக்கள் அரசியல்

ஆனால், மக்கள் விடுதலை முன்னணி அவர்களின் உறுப்பினர்களாக கருதப்பட்டவர்களின் சமூக புதைகுழி மகிந்த ராஜபக்ச காலத்தில் மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்ட போதும் அதற்கான விசாரணையை தொடர்வதற்கு முன் வரவில்லை. இதுவே இவர்களின் அரசியல்.

அத்தகைய படை கட்டமைப்புக்குள் தமிழர்களுக்கு எதிராக தமது உறுப்பினர்களை உள்நுழைய வைத்து யுத்தத்தை தீவிர படுத்தியதோடு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அரங்கேற்றியவர்களும் மக்கள் விடுதலை முன்னணியினரே.

இவர்கள் சர்வதேச விசாரணையை எந்த வகையிலும் அனுமதிக்காததோடு உள்நாட்டு விசாரணை என தமிழர்களின் கண்களிலும் சர்வதேசத்தின் கண்களிலும் மண்ணைத் தூவுவதற்கே முயற்சிக்கின்றனர்.

இவர்களின் காலத்தில் அரசியல் தீர்வுக்கும் வழியில்லை. தற்போதைய ஆட்சியாளர் காலத்தில் தமிழர் தேச மக்களாக அரசு பயங்கரவாதத்தின் உச்சத்தை அனுபவிப்போம் என்பது மட்டும் உண்மை. இதற்கு முகம் கொடுக்க ஜனநாயக வடிவில் 2009இற்கு முன்னான நிலையில் தேசமாக அரசியல் எழுச்சி கொள்ளல் வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை விமர்சித்த அருட்தந்தை மா.சத்திவேல் | Criticism On Npp Govt

தற்போதைய நிலையில் தேர்தல் அரசியல் அதற்கு முழுமையாக உதவப் போவதும் இல்லை. காரணம் தமிழர் தேசத்தை அழிக்கும் தமிழ் தேச புல்லுருவிகள் தேசம் என்றும் படர்ந்துள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாளிகளும் தேசமெங்கும் பலமாக முகாம் அமைத்துள்ளனர்.

சுயேட்சை முகத்தோடும், தமிழர் தேசிய கவசத்தோடும் தேர்தல் களத்தில் முகமூடியோடு நிற்கின்றனர். இவர்கள் வாக்காளர்களை கவர்ந்து பேசி அதிகார நாற்காலிகளை தமதாக்குவதே இவர்கள் நோக்கம். இவர்களை அடையாளம் காண்போம். தேர்தல் அரசியலுக்கு அப்பால் பலமான மக்கள் அரசியலை முன்னெடுக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம்.

அரசியல் யாப்பின் பாதுகாப்போடு கட்டமைக்கப்பட்டுள்ள சிங்கள பௌத்த பேரின வாதம் முள்ளிவாய்க்கால் 2க்குள் எமைத் தள்ளி பூகோள அரசியலுக்குள் எம் அரசியலை கரைத்து விடும் அபாயமும் உள்ளது.

இந்தியா அரசியல் சுயநலம் இனி என்றுமே எமக்கு உணவு பொட்டலத்தை வானத்திலிருந்து போடாது என்பதை மனதில் இருத்தி சுயநல அரசியலுக்கு அப்பால் பயணிக்க வழி வகுப்போம் - என்றுள்ளது.

பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் சத்தமின்றி ஒதுங்கிய லொஹான் ரத்வத்தை

பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் சத்தமின்றி ஒதுங்கிய லொஹான் ரத்வத்தை

பிரதமரின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை பயன்படுத்துவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

பிரதமரின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை பயன்படுத்துவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Ajax, Canada

16 Mar, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, உரும்பிராய், கண்டி, London, United Kingdom, Toronto, Canada

04 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

05 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், London, United Kingdom

07 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, யாழ்ப்பாணம், கனடா, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Brampton, Canada

25 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Ilford, United Kingdom, Birmingham, United Kingdom

04 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், சிட்னி, Australia

03 Apr, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருகோணமலை, East Ham, United Kingdom

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, புளியங்குளம், குருமன்காடு

02 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Montreal, Canada

01 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இடைக்காடு, Markham, Canada

28 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிலாவத்தை, Lampertheim, Germany

03 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Mühlacker, Germany

02 Apr, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US