ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கை
எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாக இருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 63ஆவது கூட்டத் தொடரின் போது இலங்கை தொடர்பான எழுத்து மூல அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிக்க இருக்கின்றார்.
இந்நிலையில் கூட்டத் தொடரின் ஆரம்ப நாளிலேயே சமர்ப்பிக்கப்படவிருக்கும் அறிக்கையின் முன்னோட்ட விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளன.
வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்கள்
அதில், போரின் போதும் அனைத்துத் தரப்பினரினாலும் இழைக்கப்பட்ட கடுமையான சர்வதேச மனிதநேய சட்டம் மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் நிலைநாட்டப்பட வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் விதத்தில் நடவடிக்கைகளை எடுத்து, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான சாதகமான சூழலை உருவாக்க வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பன போன்ற பல விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 60/01 க்கு இணங்கச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான பிந்திய நிலைமை குறித்த எழுத்து மூலமான சமர்ப்பணமாக அமைகின்றது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20