ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கை வரவேற்கத்தக்கது! - ஒக்ஸ்வெட் பல்கலைக்கழக விரிவுரையாளர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கை வரவேற்கத்தக்கது என யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்டத்துறைத் தலைவரும், தற்போதைய ஒக்ஸ்வெட் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமான குமரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையானது தமிழர் பார்வையிலிருந்து பார்க்கும் பொழுது சில முக்கியமான முன்னேற்றங்களை முன்வைக்கிறது.
அறிக்கையிலே ஐக்கிய நாடுகள் சபையில் இந்த விடயம் பாரப்படுத்தப்பட வேண்டும் என்கிற விடயம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது .
ஆனால் பரிந்துரைகளிலே தங்களுடைய நாட்டுக்கு உட்பட்டு தங்களுடைய ஆதிக்கங்களுக்குள் குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக விசாரணைகள் செய்யப்படலாமா என்ற விடயம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த அறிக்கை வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.