மதுவரி திணைக்களம் வௌியிட்டுள்ள விசேட அறிவிப்பு
அரசாங்கத்திற்கு மதுபானம் ஊடாக வரி வருமானம் 11.6 பில்லியன் அதிகரித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் மதுபான வரிகளில் 20 சதவீத அதிகரிப்பு காரணமாகவே இந்த அதிகரிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
அத்துடன் மது அருந்துதல் 8.3 மில்லியன் லீட்டர்கள் வரையில் குறைந்துள்ளதாகவும் அந்த திணைக்களம் கூறியுள்ளது.
வரி அதிகரிப்பு
மதுபானம் மற்றும் புகையிலை பயன்பாட்டுடனான வரி அதிகரிப்பு தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டு மதுவரித் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிகரெட்டுகள் மூலம் அரசாங்கத்திற்குக் கிடைத்த வரி வருமானம் 7.7 பில்லியன் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிகரெட் விற்பனை 521.5 மில்லியன் ரூபா வரையில் குறைந்துள்ளதாகவும் மதுவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri