யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின்னரான நிலவர அறிக்கை
யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, 20,732 குடும்பங்களைச் சேர்ந்த 69,384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தின நிலவர அறிக்கைப்படி, (29.11.2024) நண்பகல் 12.00 மணி வரை இந்த எண்ணிக்ககையிலான பாதிப்புக்கள் பதிவிடப்பட்டுள்ளன.
பல வீடுகள் சேதம்
இதற்கமைய, 04 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 178 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மேலும், 79 பாதுகாப்பு நிலையங்களில் 2,136 குடும்பங்களைச் சேர்ந்த 7,342 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ். கொடிகாமம் - தவசிகுளம் பகுதியில் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அந்த மக்களுக்கான உடனடி உலருணவு உதவிகளையும் அவர் வழங்கி வைத்தார்.




அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam