கணவன்மார் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் மனந்திறந்த மனைவிமார் (Photos)

Protest Jaffna Phone Politicalprisoners
By Kanamirtha Feb 26, 2022 09:10 AM GMT
Report

இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபரின் தொலைபேசியில் தமது கணவரின் தொலைபேசி இலக்கம் இருந்தமை மற்றும் அவரது தொலைபேசியில் தமது திருமண அழைப்பிதழ் இருந்தமை உள்ளிட்ட காரணங்களுக்காகத் தான் தமது கணவன்மார் கைது செய்யப்பட்டதாக சிறையில் உண்ணாவிரதம் இருப்பவர்களின் மனைவிமார் தெரிவித்துள்ளனர்.

யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கடந்த புதன்கிழமை முதல் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக அவர்களின் உறவினர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக கடந்த புதன்கிழமை முதல் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்திலிங்கம் நிர்மலதாஸ் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி நிர்மலதாஸ் தெரிவிக்கையில்,

நான் ஒரு முன்பள்ளி ஆசிரியர். எனது கணவர் கைதடி ஆரம்பச் சுகாதாரப் பிரிவு வைத்திய சாலையில் சுகாதார பணியாளராகக் கடமையாற்றி வந்தவர்.

கடந்த 2020ஆம் ஆண்டு 7ஆம் மாதம் 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைத்திருந்தனர். அவருடன் நானும் சென்று இருந்தேன்.

விசாரணைக்கு எனக் கணவனை உள்ளே அழைத்துச் சென்று இருந்தனர். சுமார் 3 மணி நேரம் நான் வெளியே காத்திருந்தேன். விசாரணைகள் முடிவடையவில்லை. பின்னர் என்னை வீடு செல்லுமாறு கூறி விட்டனர்.

அதன் பின்னர் மேலதிக விசாரணை எனக் கணவனை வவுனியா - கொழும்பு என அழைத்துச் சென்று இருந்தனர். இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபரின் தொலைபேசியில் எமது திருமண அழைப்பிதழ் இருந்தமையே எனது கணவரின் கைதுக்குக் காரணம்.

கணவர் கைது செய்யப்படும் போது, எமக்கு திருமணம் முடிந்து 157 நாட்களே ஆகி இருந்தன. கணவனைக் கைது செய்து 10 நாட்கள் கழித்து கணவன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என என்னிடம் கூறி இருந்தார்கள்.

ஆனாலும் கணவனை விடுவிக்கவில்லை. கணவன் கைது செய்யப்பட்டு 18 மாதங்களுக்குப் பின்னர் 2021ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 20ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்தி இருந்தனர்.

தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். விளக்கமறியல் காலம் 14 நாட்களுக்கு ஒரு தடவை நீடிக்கப்பட்டு வருகிறது.

எந்த வித குற்றமும் இழைக்காத எனது கணவனை விரைந்து விடுதலை செய்ய வேண்டும் என கோரியே சிறையில் கணவனும், ஆளுநர் அலுவலகம் முன்பாக நாங்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோம் எனத் தெரிவித்துள்ளார். 

அதேவேளை சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் இரட்ணசிங்கம் கமலாகரனின் மனைவி ஈஸ்வரி கமலாகரன் தெரிவிக்கையில்,

நாங்கள் கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள். எனது கணவர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றி வந்தார்.

அவர் தொடர்பான அனைத்து தரவுகளும் இராணுவம், புலனாய்வு பிரிவு என அனைத்து தரப்பினரிடமும் உண்டு. அவ்வாறு இருக்கும் போது நாட்டுக்கு எதிராக, இராணுவத்திற்கு எதிராக எனது கணவர் எப்படிச் செயற்படுவார்?

கடந்த 2020ஆம் ஆண்டு 7ஆம் மாதம் 06ஆம் திகதி கிளிநொச்சி காக்கா கடை சந்தி பகுதிக்கு விசாரணைக்கு வருமாறு தொலைபேசி ஊடாக கணவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த அழைப்பின் பிரகாரம் விசாரணைக்குச் சென்ற கணவனுடன் நானும் சென்று இருந்தேன். அங்கே விசாரித்து விட்டு வீட்டிற்குச் செல்லுமாறு கூறினார்கள். நாங்கள் வீடு திரும்பினோம்.

அவ்வேளை எம்மை பின் தொடர்ந்து வந்த கறுப்பு நிற வாகனத்தில் இறங்கியவர்கள் எனது கணவரைப் பிடித்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரது அடையாள அட்டையை என்னிடம் தந்தார்கள். நான் கணவனை அவர்களிடம் இருந்து மீட்க முயற்சி செய்தும் பயனின்றி போனது.

உடனேயே கிளிநொச்சி பொலிஸ் நிலையம், பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகம் சென்று கேட்ட போது, தாம் யாரையும் கைது செய்யவில்லை என கூறினார்கள். பின்னர் என் கணவனைக் காணவில்லை என தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யச் சொன்னார்கள்.

அங்கு முறைப்பாடு பதிவு செய்யச் சென்ற போது, எமது வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது வீட்டிற்கு முன்னால் வாகனங்கள் வந்து நிற்பதாகவும், வாகனத்தில் வந்தவர்கள் வீட்டைச் சோதனையிடுவதாகவும் கூறினார்கள்.

அதனை அடுத்து நான் வீட்டிற்குச் சென்ற போது, வீட்டின் முன்னால் எனது கணவனை அழைத்துச் சென்ற வாகனமும் நின்றது. பின்னர் அவர்கள் வீட்டிலிருந்து சென்ற போது நானும் அவர்களை பின் தொடர்ந்தேன்.

அதன்போது அவர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்குள் சென்ற போது நான் எனது கணவரை இந்த வாகனத்தில் வந்தவர்கள் தான் அழைத்துச் சென்றார்கள் என அடையாளம் காட்டி கேட்ட போது அதனை அவர்கள் மறுத்தனர். இது தங்களின் மேலதிகாரியின் வாகனம். இதில் யாரையும் அழைத்து வரவில்லை என கூறினார்கள்.

நான் அலுவலகத்தை விட்டு வெளியேறாமல் காத்திருந்தேன். சில மணி நேரத்தின் பின்னர் என்னை அழைத்து அந்த வாகனத்தினை திறந்து காட்டினார்கள்.

எனது கணவர் தாக்கப்பட்ட நிலையில், அவருடைய ஆடைகள் கிழிந்த நிலையில் கணவன் கைவிலங்குடன் வாகனத்தினுள் இருந்தார்.

பின்னர் கணவனைக் கைது செய்வதாகக் கூறி வவுனியா - கொழும்பு எனக் கொண்டு சென்று 18 மாதங்களின் பின்னர் 2021ஆம் ஆண்டு 12ஆம் ஆண்டு 20ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு யாழ்ப்பாண சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது 14 நாட்களுக்கு ஒரு தடவை விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டு வருகிறது.

எமக்கு மூன்று பிள்ளைகள், மூவருமே 10 வயதிற்கு உட்பட்டவர்கள். அவர்கள் கல்வி பொருளாதார நெருக்கடி காரணமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. கணவரின் கைதினால் நாம் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்கு முகம் கொடுத்து வருகிறோம்.

இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த நபரின் தொலைபேசியில் எனது கணவரின் தொலைபேசி இலக்கம் இருந்தமையே கணவர் கைது செய்யப்பட்டார் என கூறினார்கள்.

அதுவும் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெறுவதற்கு 5 வருட கால பகுதிக்கு முன்னர் எனது கணவரின் தொலைபேசி இலக்கம் இருந்தமை குற்றம் என கைது செய்துள்ளனர்.

எமது குடும்பச்சூழல், பிள்ளைகளின் கல்வி என்பவற்றைக் கருத்தில் கொண்டு எனது கணவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளேன் என தெரிவித்தார்.

அதேவேளை நேற்றைய தினம் வெளியான ஊடக செய்திகளில் "கரும்புலிகள் தினத்தை நினைவு கூர முயன்றமை மற்றும் தீய செயல்களை ஏற்படுத்தும் பொருட்டு வெடிபொருள் தயாரிப்புக்கு உதவியமை போன்ற குற்றச்சாட்டில்" கைது செய்யப்பட்டவர்கள் என செய்திகள் வெளியாகி இருந்தன.

அதனைத் தாம் மறுப்பதாகவும், தமது கணவன்மார் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அல்ல எனவும் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜுலை மாதம் 03ஆம் திகதி இயக்கச்சி பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில், ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வெடிகுண்டைத் தயாரித்துக்கொண்டிருந்த வேளை அது தவறுதலாக வெடித்திருந்ததாக பொலிஸார் தெரிவித்து இருந்தனர்.

அந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவரின் மனைவி நல்லதம்பி நகுலேஸ்வரியை கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து , வைத்தியலிங்கம் நிர்மலதாஸ் மற்றும் இரத்தினசிங்கம் கமலாகரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

GalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US