நக்கிள்ஸ் பாதுகாப்பு வனப்பகுதி பழைய வீதியை மீண்டும் திறப்பது குறித்து அதிருப்தி
மீமூரே பகுதிக்கு மீண்டும் அணுகலை வழங்குவதற்காக, இலங்கையின் நக்கிள்ஸ் பாதுகாப்பு வனப்பகுதியின் ஊடாகச் செல்லும் பழைய சரளைச் வீதியை மீண்டும் திறக்கும் முன்மொழிவு, தொடர்பில் இலங்கையின் யுனெஸ்கோ தேசிய ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.
இந்த வீதி, ஹோர்ட்டன் சமவெளிகள் மற்றும் சிவனொளிபாதமலையுடன் இணைந்து யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட மத்திய உயர்நிலங்களின் உலகப் பாரம்பரிய (World Heritage) அந்தஸ்துக்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கும் என்று தேசிய ஆணைக்குழுவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் பிரபாத் ஜயசிங்க எச்சரித்துள்ளார்.
அவசரகால அணுகல் வழி
தெல்தெனிய - தங்கப்புவவிலிருந்து எட்டலவெட்டுவ வரை செல்லும் இந்த வீதி, சூழலியல் ரீதியாக உணர்திறன் மிக்க நக்கிள்ஸ் காப்பகத்தை ஊடறுத்துச் செல்கிறது.

இந்த நிலையில் காப்பகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு கட்டுமானமும் அதன் அசாதாரணமான உலகளாவிய மதிப்பை சிதைத்து, உலகப் பாரம்பரியப் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச நன்கொடையாளர்களின் நம்பிக்கையையும், இராஜதந்திர நற்பெயரையும் பேணுவதற்கு, சமீபத்திய அனர்த்தத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் உள்ளூர் நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் உறுதிப்பாடுகளுடன் இணங்கிச் செல்ல வேண்டும்.
எனவே, பாதிக்கப்பட்ட சமூகங்களின் அவசரத் தேவைகளுக்கும் பாரம்பரியப் பாதுகாப்புக்கும் இடையில் சமநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், வீதி திட்டத்துடன் முன்னேறுவதற்கு முன்னர் மாற்று அவசரகால அணுகல் வழிகளை வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் யுனெஸ்கோ பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் ஆணைக்குழு கோரியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 13 மணி நேரம் முன்
உலகமே எதிர்பார்த்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் முதல் அறிக்கை! தன்னை முன்னிலைப்படுத்த தவறிய மொஜ்தபா கமேனி
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri