இலங்கையில் நீக்கப்பட்ட கட்டுப்பாடு! விசேட மருத்துவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு
பொது இடங்களில் முகக்கவசம் அணியத்தேவையில்லை என்ற சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக விசேட மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போதை சூழலில் சுவாசம் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட சகல நோய்களுக்கும் பாரிய மருந்துத் தட்டுப்பாடு நிலவுகின்றமை முழு நாடும் அறிந்த விடயமாகும்.
நோய்கள் பரவும் அபாயம்
சுவாசம் தொடர்பான நோய்கள் பெரும்பாலும் வாய், மூக்கு வழியாகவே பரவுகின்றமை அனைவரும் அறிந்துள்ள ஒன்றே. அவ்வாறான நிலையில் முகக்கவசம் ஊடாக அதிலிருந்து பாதுகாப்புப் பெறும் சூழல் காணப்பட்டது.
இந்நிலையில் தற்போது முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிக்கின்றது. அதன் மூலம் நோய்கள் பரவும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றது.
எனவே பொதுமக்கள் முடிந்த மட்டிலும் முகக்கவசம் அணிந்து கொள்வதே சிறந்தது என்றும் விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
