மன்னாரில் அவசரமாக அகற்றப்பட்ட பிரதான சோதனைச் சாவடி
மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் மற்றும் சோதனைச் சாவடிகள் இன்றைய தினம் (17) காலை அவசர அவசரமாக அகற்றப்பட்டுள்ளது.
முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மன்னார் வருகையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த சோதனை சாவடி அகற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள்
இருப்பினும் சோதனை சாவடிகள் அகற்றப்பட்டு ஒரு வார காலத்தில் மீண்டும் சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலை ஒட்டி இன்றைய தினம் (17) பிரசார நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி ரணில் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில் பிரதான பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் மற்றும் சோதனைச் சாவடிகள் அடையாளம் தெரியாத வகையில் வீதிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 12 மணி நேரம் முன்

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri
