மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்! அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அரச மற்றும் தனியார் பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்து நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
குறிப்பாக, கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுவதும், மீண்டும் பரவும் வாய்ப்பை முழுமையாக கட்டுப்படுத்துவதும் அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த ஆண்டு, நாட்டில் 95,174 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், 72 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் 07, 2026 அன்று ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, அனைத்துப் பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 4 வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைய உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. சாதனை படைத்த நிவின் பாலி Cineulagam