விடுதலை புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்: பற்ரிக் பிரவுண்
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியலிலிருந்து நீக்குவதோடு ஐக்கிய நாடுகள் சபையும், ஏனைய நாடுகளும் தமிழின படுகொலைகளை பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவும் கனடா வலியுறுத்தும் என இளம் அரசியல் பிரமுகர் பற்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.
கனடாவில் வெளிவரும் டொரோன்டோ ஸ்டார் (Toronto Star)பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.
யார் இந்த பற்ரிக் பிரவுண்
கனடா தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட ஒரு பெயராகும். பிரம்டன் வாழ் தமிழர்களிடையே மட்டுமன்றி கனடா முழுவதும் பரந்து வாழும் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற ஒரு இளம் அரசியல் பிரமுகர் ஆவார். அவர் எப்போதும் தமிழர்களுக்கு ஆதரவாக தனது குரலை நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கச் செய்துள்ளார்.
பிரம்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை நிறுவுதல்
கடந்த வருடம் தைமாதம் தமிழ் மரபுத் திங்கள் மாதமாக கொண்டாடப்படும் சரியான தருணத்தில், இலங்கையில் போரின் போது உயிரிழந்தவர்களுக்கான நினைவுச் சின்னம் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் அழிக்கப்பட்டதைக் கண்டித்து தனது ஆட்சிப் பகுதியான பிரம்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை நிறுவ ஆதரவு வேண்டி பிரம்டன் நகர சபையில் ஆதரவினைப் பெற்று அதனை கட்டி முடிப்பதாக கடந்த வருடம் உறுதியளித்துள்ளார்.
இது கனடா மட்டுமன்றி உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு ஒரு முக்கியமான விடயமாகும். இது தமிழர்களுக்கு தாம் கடந்து வந்த பாதைகள் மறக்கப்படாமல் இருப்பதற்கு நம்பிக்கை தரக் கூடிய விடயமாக இருக்குமென்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பற்ரிக் பிரவுணின் தேர்தல் சூளுரை
இந்த வருடம் தேர்தல் சூளுரையாக கன்சவேற்றிவ் தலைமைத்துவத்திற்கான தேர்தலில் வெற்றி பெற்று கூட்டாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்று தான் பிரதமராக பதவியேற்கும் பட்சத்தில் மே மாதம் 2009 ஆம் ஆண்டு நடந்த தமிழர் இன அழிப்பு நடவடிக்கையின் போது கனடா அரசாங்கம் எது விதமான நடவடிக்கைகளும் எடுக்காமல் போனதற்கு அரசாங்கம் சார்பாக தான் மன்னிப்புக்க கேட்க இருப்பதோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலிலிருந்து நீக்க இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
'இனவெறி பிடித்த அரசியல்வாதிகள் இலங்கையில் அரசாங்கத்தில் இருந்தபோது என்ன நடந்தது என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்.நான் கனடாவினை உலகத்தில் அனைவருக்கும் சம உரிமை, வாய்ப்புகளை வழங்கும் முதன்மை நாடாக மாற்றுவேன்' என்று கூறியுள்ளார்.
தமிழ் மக்களுக்கான பற்ரிக் பிரவுணின் அறிவுரை
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
தவறான அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுப்பதன் விளைவு தற்போது இலங்கையில் பிரதிபலித்துக்கொண்டிருக்கின்றது. தற்போது உங்களுக்கு சிறந்த தலைமையைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எனது தேர்தல் சூளுரைகளைப் பற்றி ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் என்னிடம் நேரடியாகவே கேட்கலாம்.
இந்த சந்தர்ப்பத்தினை நாம் நழுவ விடமுடியாது. உங்கள் ஒவ்வொருவரும், குடும்பத்தினரினரும் அங்கத்துவத்தைப் பெற்று வாக்களிப்பது மிக முக்கியமாகும் (http://donate.conservative.ca/en/membership-brown)
இறுதியில் குறைந்தபட்ச வாக்கு எண்ணிக்கைகளே வெற்றியைத் தீர்மானிக்கப் போகிறது. அடுத்த பத்து வருடங்களுக்கு நீங்கள் உங்கள் பிள்ளைகளிற்கோ அல்லது சமூகத்தினருக்கோ, மாற்றத்தினை உண்டு பண்ண முடியவில்லை என்று வருத்தப்படத் தேவையில்லை. என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்கின்றேன். எனது தமிழ் நண்பர்களும் அவர்களால் முடிந்தவற்றைப் பண்ணுகிறார்கள்.
நான் உங்கள் பங்கினைச் செய்ய வலியுறுத்துகின்றேன்.. எனது தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் உறுதிமொழிகள் பற்றி சந்தேகங்கள் இருந்தால் தயவு செய்து அது தொடர்பாக கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அனேகமாக உங்கள் நண்பர் எனது நண்பராகவும் இருப்பார்'. உங்களுக்கு நேரடியான சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் உள்ளனவா?
Zoom இனூடான அழைப்புக்கு பதிவு செய்யுங்கள். Zoom இற்கான இணைப்பு: https://tamilsforpatrick.com/zoom/ இல்லாவிட்டால், அவரை பிரதமராக்க ஏன் இன்னும் தாமதம்? இணைப்பு: https://donate.conservative.ca/en/membership-brown/
அடுத்த 10 வருடங்களுக்கோ அல்லது உங்கள் வாழ்நாள் முழுவதுமோ நீங்கள் உங்கள் பங்கினைச் செய்யவில்லை என்று வருத்தப்படத் தேவையில்லை.
பற்ரிக் பிரவுண் ஆதரவு
எமது தமிழர்களுக்கான குரலைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கச் செய்யும் குரலாகவும், எமக்கான ஒரு அடையாளத்தினை எமது சொந்த நாட்டில் பெற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், கனடாவில் எமது இனத்தினை ஒரு பெருமைக்குரிய, கலாசாரம் மற்றும் பண்பாட்டினை பெருமைப்படுத்தும் இனமாகவும், எமது தேவையறிந்து பூர்த்தி செய்யும் எமது சகோதரர் பற்ரிக் பிரவுண் அவர்களை அடுத்த கன்சவேற்றிவ் தலைமைத்துவ வாக்கெடுப்பிலும், கூட்டாட்சித் தேர்தலிலும் வெற்றி வாகை சூட வைப்போமாக!