அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்! விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது
பால் மா உள்ளிட்ட சில பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கி அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது.
இதுவரை காலமும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த சில பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.
கோதுமை மாவிற்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்படுவதாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
2003ம் ஆண்டு நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் பிரகாரம் இந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பால் மா ( முழு ஆடை பால் மா, ஆடைநீக்கிய பால் மா மற்றும் சிசுகளுக்கான பால் மா) என்பனவற்றுக்கான கட்டுப்பாட்டு விலையும் நீக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திரவ பெற்றோலிய எரிவாயுவின் கட்டுப்பாட்டு விலையும் நீக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி குறித்த பொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.






16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
